திருநெல்வேலி: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை போக்குவரத்து – குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அறிவுறுத்தலின்படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், காவல் உதவி ஆணையர், கணேசன், (பொறுப்பு ஆயுத படை) தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் செல்லத்துரை,(பாளை) மணிமாறன், (சந்திப்பு) மற்றும் போக்குவரத்து காவலர்கள் இணைந்து பாளை சேவியர் பள்ளி, ம.தி.தா இந்து கல்லூரி மாணவ மாணவியர்கள்யிடம் பேருந்து படியில் நின்று ஆபத்தான பயணம் செய்தல், (18). வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, உட்பட போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துக்கூறி, சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அறிவுரைகள் வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்