மதுரை: 37-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – ஜனவரி (2026) முன்னிட்டு, மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். மதுரை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை மதுரை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின் போது, மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த முகாமில் காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். சாலை பாதுகாப்பில் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















