கடலூர்: மேற்கு வங்காளம் மாநிலம் ஹீக்கி நகரில் நடைபெற்ற 46வது தேசிய சப் ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், கடலூர் மாவட்டம் சங்கொலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த எம். ரஞ்சித் இந்திய விளையாட்டு ஆணையம் அணியின் சார்பில் பங்கேற்று விளையாடினார். ஆண்கள் பிரிவில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற ரஞ்சித்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
















