தேனி : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கடந்த (18.05.2022), ந்தேதி முதல் (22.05.2022), ந்தேதி வரை தேசிய அளவிலான, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 12 காவல்துறையினர், கலந்து கொண்டனர். இதில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக்காவலர் திரு.ப.மாரியப்பன், அவர்கள், குண்டு எறிதல் போட்டியில் 2-வது இடம் பெற்று, வெள்ளி பதக்கத்தையும், தட்டு எறிதல் போட்டியில் 3-வது இடம் பெற்று, வெண்கல பதக்கத்தையும், சங்கிலிக்குண்டு எறிதல் போட்டியில் 3-வது இடத்தை பெற்று, வெண்கல பதக்கத்தையும் பெற்றார். இதையடுத்து தேசிய அளவில் சாதனை படைத்த தலைமைக்காவலரை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், தெரிவித்தார்.