கிருஷ்ணகிரி : டெல்லியில் நடைப்பெற்ற 66-வது தேசிய அளவிலான ஏர் ரைப்பிள் சாம்பியன்ஸ் போட்டியில் ஓசூர் பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவி எஸ்.சமிக்ஷா, நாளந்தா பள்ளி மாணவி டி.நட்சத்திர ஆகியோர் பங்கேற்று, தேசிய அளவிலான போட்டிகளில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பங்கேற்க தேர்வாகி உள்ளனர். ஓசூர் நகர காவல்துறை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு ஓசூர் ரைப்பிள் கோச்சிங் அசோசியன் தலைவர் டாக்டர்.சோமசுந்தரன் தலைமை தாங்கினார். மிண்டா குரூப் மருத்துவ அதிகாரி டாக்டர். வாழைபரமேஸ்வரன், வணிகவரிதுறை துணை கமிஷனர் டி.சங்கரமூர்த்தி உள்ளிட்டோர் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தியா முழுவதும் பல்வேறு வயதுகளின் பிரிவில் 7000 பேரும், தமிழகத்திலிருந்து சுமார் 700-க்கும் மேல் பங்கேற்றிய நிலையில் (14) வயதுக்கு உட்பட்ட ஓசூர் மாணவிகள் இரண்டு தேர்வு செய்யப்பட்டனர் என்று தலைமை பயிற்சியாளர் டி.நிஷாந்த் தெரிவித்தார். சென்னையில் நடைப்பெற்ற போட்டியில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அசோசியன் பொருளாளர் பி.தங்கமணி, இணை செயலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்