தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (23.10.2025) தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டும், மேலும் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், காவல் நிலைய வரவேற்பாளரிடம் புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
















