கிருஷ்ணகிரி: வரட்டணப்பள்ளி அருகே தேசுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (45). நாடக கலைஞர். இவர் மதியம் தன்னுடைய டூவீலரில் கிருஷ்ணகிரி நகரில் ரவுண்டானா அருகே சென்றபோது, பின்தொடர்ந்து வந்த சின்ன நரசிம்மன் என்பவர் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு, வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய சின்ன நரசிம்மனை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்















