திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் பா. மூர்த்தி, இ.கா.ப., அலுவலகத்தினை தென் மண்டல காவல்துறை தலைவர், பிரேம் ஆனந்த் சின்கா.இ.கா.ப., வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது சரக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பராமரிப்பது குறித்து காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய பின்,
சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 21 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், ஏ.சுந்தரவனம், இ.கா.ப.,(கன்னியாகுமரி), ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., (தூத்துக்குடி), வி.ஆர். ஸ்ரீனிவாசன், (தென்காசி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்