திருநெல்வேலி: திருநெல்வேலி சரகத்தில் (20.01.2026) அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பங்கேற்க வருகை தந்த தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, இ.கா.ப., மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அங்கு பணியாற்றும் காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, அவர்களிடமிருந்து குறை நிவாரண மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், சரகத்திற்கு உட்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், ப. சரவணன், இ.கா. ப., மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ.மணிவண்ணன், இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் வி. பிரசண்ண குமார், இ.கா.ப., கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின், இ.கா.ப., தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன், இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், குற்ற நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் பல்வேறு காவல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய மூன்று காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 காவல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















