கிருஷ்ணகிரி : கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் ஓசூர் மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதில் ஓசூரைச் சேர்ந்த 20 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்கள் பெற்றனர். பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்