தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஜல் ஜீவன் கூட்டு குடிநீர் திட்ட வேலைகள் திருவேங்கடம் பஜார் பகுதியில் நடைபெறுவதால் (20.9.2025) அன்று இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக கோவில்பட்டி, சிவகாசி செல்லும் வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில், புதிய பேருந்து நிலையம், கழுகுமலை ரோடு வழியாக கோவில்பட்டி, சிவகாசி செல்ல வேண்டும் மேலும் ராஜபாளையம் ரோடு, பருவக்குடி விளக்கு வழியாக கோவில்பட்டி சிவகாசி செல்லும் வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில், புதிய பேருந்து நிலையம், கழுகுமலை ரோடு வழியாக கோவில்பட்டி, சிவகாசி செல்ல வேண்டும் மேலும் கோவில்பட்டி சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவேங்கடம், குருவிகுளம், கழுகுமலை ரோடு, கே ஆலங்குளம் வழியாக சங்கரன்கோவில் ராஜபாளையம் செல்ல வேண்டுமென சங்கரன்கோவில் போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுகொள்ளபடுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்