தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உட்கோட்டம், சின்னகோவிலாங்குளம் காவல் நிலைய சரகம் ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் (04.03.2026) அன்று குருசாமி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மறைந்த குருசாமி யாதவ் மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவில் மனுதாரர் அன்னதானம் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு மேடை, பதாகை, ஃப்ளெக்ஸ் போர்டு, ஒலி பெருக்கி போன்றவை அனுமதியில்லை, மனுதாரரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், வெளியூரை சேர்ந்த நபர்களுக்கு அனுமதி இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, (04.03.2026) அன்று நடைபெறும் குருசாமி யாதவ் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர், உள்ளூர் மக்களை தவிர பிற நபர்களுக்கு அனுமதி இல்லை என்ற விபரம் காவல்துறையால் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பிற அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














