தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், B.E., M.B.A., அவர்களின், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகின்றதா? என அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையை தென்காசி மாவட்டத்திலுள்ள 180 க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து நடத்தி வருகின்றனர்.