தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய சரகம், நெற்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் மாற்றுத்திறனாளியான விவசாயி சங்கரலிங்கம் மற்றும் அவரது மனைவியை குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக சங்கரலிங்கத்தின் உறவினர்கள் அருவாளால் தாக்கியதில் சங்கரலிங்கம் சம்பவ இடத்தில் இறந்து விட்டார். படுகாயம் அடைந்த அவரது மனைவி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, துரிதமாக செயல்பட்டு வழக்கில் தொடர்புடைய 10 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















