தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் தலைமையில் கனிமவள லாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன், ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ், தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் N.சரவணபவன், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் T.வினோத், செங்கோட்டை வட்டாட்சியர் ஆ.வெங்கடசேகர், ஆகியோருடன் அனைத்து கிரஷர் உரிமையாளர்கள், இந்தியன் டிரைவர் சொசைட்டி செயலாளர், செங்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கால வரையறை, மற்றும் வேக வரையறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அதை மீறும்பட்சத்தில் வாகன ஓட்டுநர், மற்றும் நடத்துனருடன் கிரஷர் உரிமையாளர்களும் பொறுப்பாவர் என்று எடுத்துரைக்கப்பட்டது. கடந்த (03.10.2025) அன்று செங்கோட்டையில் தேன்பொத்தை அருகில் நடந்த வாகன விபத்தில் கால அளவை மீறி வாகனம் ஓட்டிய போது நடைபெற்ற விபத்து தொடர்பான வழக்கில் அந்த வாகனத்திற்கு கனிமங்களை வழங்கிய கிரஷர் உரிமையாளரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். என்பதை எடுத்துரைத்து கால மற்றும் வேக வரையறையை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்