தென்காசி: தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட VAO அலுவலகம் எதிரே சக்திராஜன் என்ற நபர் நின்று கொண்டிருந்தபோது அவரின் பின்புறம் அவருக்குத் தெரியாமல் யாரோ ஒரு நபர் அவரது மணி பர்சை திருடி சென்றதை உணர்ந்த சக்தி ராஜன் கூச்சலிடவும் அங்குள்ள பொதுமக்கள் சேர்ந்து திருடனை பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த சார்பு ஆய்வாளர் திரு. மாரிமுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் மணி பர்ஸ் திருடிச் சென்றது கடப்பா கத்தி பகுதியை சேர்ந்த சங்கிலி என்பவரின் மகன் நாராயணன் 50 என தெரியவந்தது. இதுகுறித்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.