நெல்லை: நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்படி, நெல்லை மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் 18 தூய்மை பணியாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சுப்பாராஜூ, தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.