தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ்குமார், கோவில்பட்டி திரு. கலைக்கதிரவன், விளாத்திக்குளம் திரு. பீர் மொஹைதீன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திரு. பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு. நாகராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
G. மதன் டேனியல்
தூத்துக்குடி