தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி. மதன் ஐ.பி.எஸ் அவர்கள் (16.02.2026) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்வில் உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொறுப்பேற்ற பின்னர், மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, போக்குவரத்து மேலாண்மை, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சிறப்பான காவல் சேவைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
















