தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக திரு. நை. சிலம்பரசன் அவர்கள் (01.01.2026) அன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையின் சட்டம் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துதல் குறித்து அவர் முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களுடன் நல்லுறவை பேணுவதோடு, நேர்மையான மற்றும் விரைவான காவல் சேவை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த நிகழ்வின் போது காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
















