தூத்துக்குடி: கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்தவர்களான அசோக் (எ) அய்யாதுரை (27). வேல்முருகன் (34). மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்தவர்களான தண்டபாணி (23). மலையாண்டி (39), தங்கதுரை (எ) தங்கையா (22). ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி மதன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி 5 குற்றவாளிகளை நேற்று (07.03.2026) சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
















