தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில், திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி காவலர் குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (04.03.2026) காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து காவலர் குடியிருப்பை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் திரு. குமரேசன், தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. ராகுல் V கோபால் இ.கா.ப, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுனில் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.















