தூத்துக்குடி: தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான முருகேசன் (59). இசக்கிராஜா (22). மற்றும் விருதுநகரை சேர்ந்த கோபால்சாமி (47). ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி 3 குற்றவாளிகளை (20.02.2026) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 25 குற்றவாளிகள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















