தூத்துக்குடி : தூத்துக்குடியில் பெண்களை, கட்டாயப்படுத்தி விபச்சாரம் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர், அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா, தலைமையில் விசாரனை நடைபெற்றது.
போலீசார் விசாரணை, மேற்கொண்டதில் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, 1வது ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு வீட்டில், தூத்துக்குடி வண்ணார் 1வது தெருவைச் சேர்ந்த சிலுவை பிச்சை மகன் மரிய லூர்து ஸ்டாரின் (22), என்பவர் சென்னை, பெங்களூர் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரி மரிய லூர்து ஸ்டாரினை கைது செய்தனர்.