தூத்துக்குடி : விளாத்திகுளம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு, இரட்டை ஆயுள் தண்டனையுடன் வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை தூத்துக்குடி, இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு இவ்வழக்கை, சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பாராட்டு.