தூத்துக்குடி : தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஜெயபாண்டி (50). பந்தல் போடும் தொழிலாளி. கடந்த 30ம் தேதி இவரது வீட்டின் அருகே அதே தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (23), என்பவர் மது குடித்துள்ளார். இதனை ஜெயபாண்டி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அவரை கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஜெயபாண்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்தார். இந்நிலையில் மருத்துவமனைையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயபாண்டி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிந்தார். இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.