தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் (27.03.2026) முறப்பநாடு, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆத்தூர், தூத்துக்குடி வடபாகம் ஆகிய காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு செய்து, அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டார். மேலும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் நிலைய போலீசாரிடம், தேர்தலில் காவல்துறையினரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது, பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வது, தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 0461 2341248 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று காவல்துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
















