தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் இன்று திறந்து வைத்தார். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ், கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் : தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணித்து மீனவர்கள் மற்றும் இங்கும் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.