தேனி : தேனி மாவட்டம் முழுவதும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு, கீழ்காணும் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.
-
கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், தங்களை சார்ந்தவர்களையும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து முகக்கவசம் அணிவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
-
கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
-
விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.
-
ஏதேனும் சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்.
-
முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பண்டிகை பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்.
இதனை தொடர்ந்து இலவச முகக் கவசங்கள் வழங்கியும், துண்டு பிரசுரங்கள் மூலம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி