திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களை பெற்று மணு ரசீது பதிந்து அதன் விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல்நடவடிக்கைக்காக அனுப்பியிருந்ததின் பேரில் மேற்படி மனுக்களை துரிதமாக விசாரணை மேற்கொண்டதின் பேரில் மாவட்டம் முழுவதும் 163 செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். அதன் மொத்த மதிப்பு ரூபாய் 37 லட்சத்து 49 ஆயிரம் ஆகும் (Value Rs.37,49,800/-) (22.11.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc அவர்களால் சைபர் செல் பிரிவு காவல்துறையினரால் மீட்கப்பட்ட 163 செல்போன்களும் அதன் உரிமையாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டது.
சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும், அதை வாங்கி சிம்கார்ட் போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். இது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது சம்மந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப்பெற்றாலும் உடனடியாக அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். மேலும் 24×7 காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் / வாட்ஸ்ஆப் எண் 9442992526-ற்கு புகார்கள் தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.