மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மதுரை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சார்பாக, திருமதி. அன்னா பீவீகுலாம் உசேன் என்பவரின் பங்களிப்பால், மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவில் பாப்பாகுடி, குலமங்கலம், பொதும்பு ஆகிய பஞ்சாயத்தில் பணி புரியும் 200 துப்புரவு பணியாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், கையுறை மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களால், வழங்கப்பட்டது.
மேலும், இந்நிகழ்ச்சியில் பாண்டியராஜா, ராஜ்குமார் மற்றும் குமார் விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு, திரு.கிருஷ்ணபாண்டி, சார்பு ஆய்வாளர் சமூகநீதி மனித உரிமைகள் பிரிவு, ஆகியோர் பங்கேற்றனர்.