திண்டுக்கல் : திண்டுக்கல் நகர துணை எஸ் .பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல் வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் போலீசார் என 10 பேர் இடம்பெற்று இருக்கின்றனர். இந்த சிறப்பு புலனாய்வு போலீஸ் படையினர் மாவட்டத்தில் நீண்டநாட்களாக துப்புதுலங்காமல் இருக்கும் கொலை, கொள்ளை வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் துப்புதுலங்காத வழக்குகளின் விசாரணை தொடர்பாக ஆய்வு செய்வதற்கு, போலீஸ் ஐ.ஜி.மல்லிகா நேற்று திண்டுக்கல் வந்தார். இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ் .பி பாஸ்கரன், ஐ.ஜி.யை வரவேற்றார். இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து, துப்புதுலங்காத வழக்குகள் தொடர்பாக ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா