கிருஷ்ணகிரி: ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் கோர்ட் வளாகத்தில் (09.01.2025) ஆம் தேதி காலை 10.00 மணிக்கு போலீசார் பாதுகாப்பிற்காக இருந்த போது இரண்டு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விசாரித்த போது ஐந்து நபர்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்தனர். மேலும் அவர்களை விசாரிக்க பாகலூர் காவல் நிலைய வழக்கில் நான்கு நபர்கள் ஓசூர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமினில் கையொப்பம் போட வந்ததாகவும் அவர்களுடைய பாதுகாப்பிற்கு முறையான உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்திருந்ததாக கூறிய பத்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ஐந்து கைத்துப்பாக்கிகள் இரண்டு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து பத்து நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.