திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (18). இவா் தனது நண்பரான (17). வயது சிறுவனுடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் என்ற இளைஞரை அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர், முருகனையும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் சண்முகசுந்தரம் மீது குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயந்தி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சண்முகசுந்தரத்தை நேரில் சென்று பார்த்து நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அதனை வாக்குமூலமாக பதிவு செய்தார். இதையடுத்து சண்முகசுந்தரத்தை ஆக.30-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்