திண்டுக்கல்: திண்டுக்கல், மாலப்பட்டிரோடு, மயானம் பகுதியில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர். வெங்கடாஜலபதி தலைமையிலான காவல்துறையினர் கொலை வழக்கில் தொடர்புடைய பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை குற்றவாளி ரிச்சர்ட் சச்சினை அழைத்துச் சென்று எடுக்க சென்றபோது காவலர் அருண்பிரசாதை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்தபோது குற்றவாளி ரிச்சர்ட் சச்சினை ஆய்வாளர். வெங்கடாஜலபதி வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். காவலர் அருண்பிரசாத் மற்றும் குற்றவாளி சச்சின் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அருண்நாராயணன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா