திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் அய்யனார்நகரை சேர்ந்த சீனிவாசன் (40), இவரின் வீட்டின் முன்பக்க வளாகத்தில் சுமார் 7 அடி நீள சாரை பாம்பு ஊர்ந்து சென்றது இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்த போது வீட்டின் வளாகத்தில் இருந்த பாம்பை காணவில்லை. அப்பகுதியை சுற்றிலும் பாம்பை தேடி பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த துணி துவைக்கும் எந்திரத்துக்குள் பாம்பு பதுங்கியிருந்ததை தீயணைப்பு படையினர் பார்த்தனர். பின்னர் அவர்கள், அந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். மேலும் அதனை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.