திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் (19.02.2026) அன்று காலை சுமார் 08.30 மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்த தச்சநல்லூர், மங்களாகுடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் பேச்சிமுத்து என்பவரை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர். நெ. மணிவண்ணன், இ.கா.ப. நேரில் அழைத்து அவருடைய துணிச்சலை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார். மாநகர காவல் துணை ஆணையர் V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) உடன் இருந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















