திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். (85). மூதாட்டி இவர் கடந்த 23-ம் தேதி வீட்டில் படுத்திருந்த போது, அதிகாலையில் வீட்டில் இருந்த விளக்கில் இருந்து எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றியது. இதில், உடல் முழுவதும் பரவியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார். ஆபத்தான நிலையில் ,நத்தம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்ட அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் மூதாட்டி இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து, நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி