தருமபுரி : தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C. கலைச்செல்வன், அவர்கள் உத்தரவின் படி அரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களின் மேற்பார்வையில் பொம்மிடி காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள மொபைல் போன் டவர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு மலை கிராமங்களைச் சேர்ந்த மணி (20), சக்திவேல் (25), பெரியண்ணன் (37), கோவிந்தராஜ் (35), கார்த்தி (21), சக்திவேல் (20) பிரவீன் (21) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து நகைகள் பொருட்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்