திண்டுக்கல்: ஆகஸ்ட் 15 -ம் தேதி (வெள்ளிக்கிழமை) சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
திண்டுக்கல் மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் திண்டுக்கல், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சவேரியார் பாளையம் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன வாகன ஓட்டிகளிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என்று சோதனையிடப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா