திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் ராமராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓட முயன்றார். இருந்தபோதும் காவல்துறையினர் அவரை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் சிவகங்கையை சேர்ந்த நாகராஜன் என்பவதும், இவர் திண்டுக்கல் பகுதிகளில் கொள்ளையடிக்கும் போது யாராவது குறுக்கே வந்தால் அவர்களை கொலை செய்து விட்டு தப்பிப்பதற்காக பட்டாகத்தி வைத்திருந்ததாக கூறினார்.இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.