திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் முறையாக மருத்துவம் பயிலாமல் போலி மருத்துவ சான்றிதழ் பெற்று போலியாக மருத்துவம் பார்ப்பதாக வந்த இரகசிய தகவலின் படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்.,BVSc அவர்களின் உத்தரவின் பேரில் காவல் மற்றும் மருத்துவ துறையினர் அடங்கிய தனிப்படையினர் இணைந்து மாவட்டம் முழுவதிலும் நடித்திய தீவிர தேடுதல் வேட்டையில் 7 போலி மருத்துவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.