திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் தங்கப்பாண்டி(30), என்பவர் 2016 – ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற ஜாமினில் வெளிவந்தவர். SC- ST வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை உத்தரவை பிறப்பித்தது. இதனை அடுத்து வேடசந்தூர் டிஎஸ்பி. திருமதி. துர்காதேவி தலைமையிலான தனிப்படையினர் சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியன், ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையின் போது பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த தங்கபாண்டியனை கைது செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேடசந்தூர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தங்கபாண்டியன் மீது எரியோடு வடமதுரை ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
