அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, டூவீலரில் சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை விசாரித்ததில் அவர்களிடமிருந்து விற்பனை செய்வதற்காக கஞ்சா 1 கிலோ மற்றும் ரூபாய் 5300/-மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஜெயங்கொண்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.