திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பந்தமாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன், உத்தரவின் பேரில் நகர டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன், நகர் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டி, ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் CCTV பதிவுகளை ஆய்வு செய்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஆனந்தன் (30), என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நான்கு எக்ஸெல் சூப்பர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.