சென்னை : சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சூளைமேடு, பகுதியைச்சேர்ந்த ஜெயசூர்யா, என்பவர் அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அடிக்கடி அழைத்துச்சென்று பாலியல் உறவு கொண்டுள்ளார். சிறுமியின் தாய் இது குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயசூர்யா (24), சூளைமேடு என்பவரை கைது செய்தனர். மேலும் சிறுமியை தங்கும் விடுதியில் தங்க அனுமதித்த தங்கும் விடுதி மேலாளர் ஸ்டீபன் சுரேஷ்குமார் (54), மதுரை மாவட்டம் மற்றும் அறை உதவியாளர் , கண்ணன் (52), சிவகங்கை மாவட்டம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.