திருநெல்வேலி: தீயணைப்பு துறை வீரர்கள் நினைவாக, ஆண்டுதோறும் உயிா் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் நினைவு ஸ்தூபிக்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் சரவண பாபு, மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில், தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்