சிவகங்கை: இதைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ். இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 ஆயுதப்படை காவலர்கள், 37 சிறப்புக் காவல்படை காவலர்கள், 17 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை காவலர்கள் ஆகிய மொத்தம் 69 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9-ம் அணி தளவாய் திரு.கார்த்திகேயன், சிவகங்கை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிரவன், துணைத் தளவாய் திருமதி.ஸ்ரீதேவி, சிவகங்கை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி அலுவலர் திரு.செந்தில், மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர் (நிர்வாகம்) திரு.அசோக் ராஜ்குமார், நிர்வாக அலுவலர் (கணக்கு) திரு .வசந்தகுமாரி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி