மதுரை: காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர்,ரூ.271.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் , சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி மூலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக மதுரை மாவட்டத்தில் ரூ.271.97 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்தில், குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
குறிப்பாக, அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் ரூ.117.05 இலட்சம் மதிப்பீட்டில் 3,217 சதுர அடி பரப்பளவிலும், கள்ளிக்குடி தீயணைப்பு நிலையம் ரூ.154.92 இலட்சம் மதிப்பீட்டில் 2,614 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி , தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மதுரை மண்டல துணை இயக்குநர் ந.விஜயகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜேம்ஸ் தாஸ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் த.வெங்கட்ரமணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி