மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தீய ணைப்பு மற்றும் மீட்புகள் பணித் துறை சார்பாக பொதுமக்களிடையே தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புவதற்கு வருகை தந்து கற்றுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வு பயிற்சி முகாம் 2 நாட்களில் மூன்று கட்டமாக நடந்த து. இந்த பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், 12மணி முதல் 1 மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் 5 மணி வரை நிலைய அதிகாரி ஆல்பர்ட் பிரான்சிஸ் தலைமையில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடைமுறைகளை கற்றுக் கொடுத்து மற்றும் அழிவுகரமான தீயில் இருந்து உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பது, வெள்ளம் புயல் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளில் இருந்து மீட்பது உள்ளிட்ட நடவடிக்கை பணிகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி